பெரம்பலூர்: திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்; திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வாக்குசேகரிப்பு!

schedule
2026-04-16 | 14:50h
update
2026-04-16 | 14:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Vote for the ‘Rising Sun’ symbol to usher in the ‘Dravidian Model 2.0’ era of governance!” — DMK Candidate Jayalakshmi campaigns for votes.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் வல்லபன் தலைமையில் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு சேகரித்தார். அப்போது நாரணமங்கலத்தில் பேசியதாவது:

திமுகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர், மண்ணின் மைந்தர் அண்ணன் ஆ. ராசா அவர்களின் ஆதரவு பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான எனக்கு உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

நான் என்றும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருந்து, உங்களின் கோரிக்கைகளையும் உங்களுக்கான திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றிட பாடுபடுவேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுவதோடு, எங்களது லக்ஷ்மி மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கிடவும் ஏற்பாடு செய்தேன் என்றும் இந்நேரத்தில் உறுதி கூறிக்கொள்கிறேன்.

இத்தகைய நல்லதொரு நிகழ்வினை ஏற்பாடு செய்து கொடுத்த திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர் இப்பகுதியைச் சார்ந்த கிளைக்கழகச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைத்து திராவிட திமுக நிர்வாகிகளுக்கும், தம் கூட்டணி கட்சியை சார்ந்த அனைத்துக் கட்சியினரின் நிர்வாகிகளுக்கும், ஊர் பொதுமக்களாகிய என் சொந்தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர்ந்திட நம் கழகத் தலைவர் சமூக நீதி காவலர் தளபதி அவர்கள் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறிட நம் அண்ணன் ஆ. ராசாவின் புகழ் ஓங்கிட வாக்களிப்பீர் உதயசூரியன்; நமது சின்னம் உதயசூரியன், வெற்றிச் சின்னம் உதயசூரியன். வாக்களிப்பீர் உதயசூரியன். நன்றி, வணக்கம்.” என பேசினார்.

திருவளக்குறிச்சி, ஊத்தங்கால், பாடாலூர், பெருமாள் பாளையம் மாரியம்மன் கோவில், இரூர், ஆலத்தூர், மருதடி, விஜயகோபாலபுரம், நாரணமங்கலம் பகுதிகளில வாக்குகளை ஏப்.13 அன்று திமுக மற்றும் விசிக செய்தி தொடர்பாளர் வக்கீல் அழகுமுத்து உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை சேகரித்தார். வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு, ஆரத்தி எடுத்தும், வேட்டுக்கள் முழங்கவும், சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 14:52:55
Privacy-Data & cookie usage: