பெரம்பலூர்: 18 வயது நிறைவு செய்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை; கலெக்டர் தகவல்!

schedule
2026-10-01 | 16:08h
update
2026-10-01 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Voter ID cards for those who have turned 18; Collector’s announcement!

வாக்காளர் பதிவு விதிகள் 1960 இல் கொடுக்கப்பட்டுள்ள படிவம்-6யை மட்டும் நிரப்பி வண்ணப் புகைப்படம், ஆதார் நகல், வயதிற்கான ஆவணம், முகவரிக்கான ஆவணம் மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தாங்கள் வசிக்கும் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ (BLO) அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடமோ (வட்டாட்சியர் அலுவலகங்கள்) வழங்கினால் போதுமானது எனவும், தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர் குறித்த உறுதிமொழி படிவம் (Declaration Form) வழங்கிடத் தேவையில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதன்படி,பெரம்பலூர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 147. பெரம்பலுர்(தனி) மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் இதுநாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளர்களையும், 18 வயது நிறைவடைந்த நிலையில் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள ஆவலுடன் உள்ள இளைய வாக்காளர்களையும் உடனடியாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்,

மேலும், தற்போது வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதால் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள், தற்காலிக தங்குமிடங்களில் வசிப்பவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர்களிடம் நேரடியாக ஆவணங்கள் பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்திட வேண்டும் என அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.10.2026 - 16:26:49
Privacy-Data & cookie usage: