பெரம்பலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட உள்ளது; கலெக்டர் தகவல்!

schedule
2026-03-21 | 15:12h
update
2026-03-21 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Voting machines to be allotted through a randomization process; Collector informs.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் , 2026-இற்காக முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு (First Level Checking) மாவட்ட ஆட்சியரக மத்திய காப்பறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 1416 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unit), 930 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit), 934 வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPAT) ஆகியவற்றை 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கும் கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் முதல் குலுக்கல் முறை நடவடிக்கையானது நாளை 23.03.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான (தனது) தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

மேற்கண்டவாறு சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்தளிக்கப்பட்ட மின்னணு வாக்குப்திவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் பதிவெண் வாரியான பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு பிரித்தளிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்காக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 148 குன்னம் சட்டமன்ற தொகுதிக்காக வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறைகளுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் 24×7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்படும்.

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக கணினி வழியில் பிரித்தெடுக்கும் 1st Randomization குறித்து விரிவான வழிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் https://www.eci.gov.in/evm-vvpat இல் வழங்கப்பட்டுள்ளது, என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 04:34:01
Privacy-Data & cookie usage: