பெரம்பலூர்: திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்; மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் ஆ.ராசா எம்.பி பேச்சு!

schedule
2026-04-01 | 12:38h
update
2026-04-01 | 12:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “We must ensure that DMK candidate Jayalakshmi wins by a margin of 62,000 votes,” stated MP A. Raja at a ceremony where members of other political parties joined the DMK.

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நகர திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகரன் ஏற்பாட்டில் முன்னாள் கூட்டுறவு நகர் புற வீட்டு வசதி சங்கத் துணைத் தலைவரும், OPS அணியின் மாவட்ட துணைத் தலைவருமான இக்பால் இன்று சுமார் 45 நபர்களுடன் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

Advertisement

அப்போது, அவர் பேசியதாவது: புதிதாக கட்சியில் இணையும் இக்பால் உள்ளிட்டோரை வரவேற்பதோடு, புதியவர்களுக்கு வழிவிட்டு அரவணைப்பதும், ஏற்கனவே இருப்பவர்களை பாதுகாப்பதும் மாவட்ட திமுக செய்யும்.

தற்போது நடக்கும் தேர்தல் தமிழ்நாட்டிற்குள் நடப்பது என்றால் சுமார் 120 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதும். அது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்பதால் சுமார் 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும். தற்போது பெரம்பலூர் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் டாக்டர் ஜெயலட்சுமியை கடந்த முறை தேர்தலில் சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த முறை சுமார் 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வந்திருக்கும் புதியவர்கள் அனைவரும் பணி செய்ய வேண்டும். திராவிடத்தை காக்க பெரியார், அண்ணா, கலைஞர் மட்டுமல்லாது எம்.ஜி.ஆர் கூட சனாதனா சக்திகளை தமிழகத்தில் உள்ளே வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்றாக்கியது போல் முத்துவேல் கருணாநிதி செயல்படுகிறார். அவர் வழியில் உறுதுணையாக இருப்போம் என பேசினார். அமைச்சர் சிவசங்கர், வாழ்த்தி வரவேற்று பேசினார். திமுக பொதுக்குழு உறுப்பினர் கீழக்கரை மு.அட்சயகோபால், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், வேப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன், பிரபா செல்லப்பிள்ளை, வக்கீல் என்.ராஜேந்திரன், என்.எம்.ஜி சுப்பிரமணியன், மாவட்டட மகளிரணி மகாதேவி ஜெயபால், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், நல்லதம்பி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பாஸ்கர், சன்.நம்பத், பூலாம்பாடி பேரூர் செயலாளர் செல்லலட்சுமி சேகர், பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், கவுன்சிலர்கள் ஜெயபிரியா, சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 19:45:55
Privacy-Data & cookie usage: