Perambalur: We will bring a medical college and an agricultural college; Interview with MLA Sivakumar!
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மக்காசோளம் மற்றும் வெங்காயத்திற்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்வேன் என பெரம்பலூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபையில் பதவி ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் இன்று பெரம்பலூரில் நடந்த கட்சி நிர்வாகிள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
“வணக்கம் நண்பர்கள், வணிகர்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். என்னுடைய மக்களுக்கு கண்டிப்பாக, இந்த பெரம்பலூர் பகுதி மக்களுக்கு கண்டிப்பாக அடிப்படை வசதிகள், இப்ப சமீபத்துல குடிநீர் சம்பந்தமா வந்திருக்கு, இதெல்லாமே நான் கண்டிப்பா நிறைவேத்துவேன். அதே மாதிரி பல ஆண்டுகளாக கிடப்பில போடப்பட்ட திட்டங்கள் நிறைய இருக்கு, அதை கண்டிப்பா விரைவுபடுத்த கண்டிப்பா உத்தரவாதம் கொடுப்போம்.
அதே மாதிரி மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி இதெல்லாம் நம்மளோட பகுதியில கிடையாது. கண்டிப்பா இதை கொண்டு வருவதற்கு நாங்க 100% உத்தரவாதம் கொடுக்கிறோம், கண்டிப்பா நாங்க பண்ணுவோம்.
அதே மாதிரி அடிப்படை தேவைகள் எங்கெங்க இல்லையோ, அது அந்தந்த பகுதியில போய் எங்களோட கழக நிர்வாகிகள் கண்டிப்பா அதை சந்திச்சு, அதை நிறைவேத்து பண்ணுவாங்க. அதற்கு கண்டிப்பா நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம். எல்லா விதமான மக்களுடைய அடிப்படை தேவைகள், இத எல்லாமே நிறைவேத்துறதோட தான் எங்களோட அரசு இருக்குது. எங்களோட முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய் அவர்கள் அதை ஒரு முன்னெடுத்து பண்ணிட்டு இருக்காரு, உங்களுக்கே தெரியும்.
இனிவரும் காலங்கள்ல ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் அந்தந்த தரத்துக்கு தகுந்த மாதிரி கண்டிப்பாக செய்து தரப்படும். படிப்படியாக திட்டங்கள், எந்தெந்த திட்டங்கள், கோரிக்கைகள் நாங்க அறிவிச்சோமோ, அது எல்லாமே நிறைவேற்றப்படும்னு இந்த நேரத்துல தெரிவிச்சுக்கிறேன். மீண்டும் என்னோட பெரம்பலூர் மக்கள், அவங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன், வணக்கம்.” என தெரிவித்தார்.
தவெக மாவட்ட ஐ.டி விங் ராஜேஷ், ஈஸ்வர் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள் புருஷோத்தமன், வினோத், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, பெரம்பலூர் செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் வெற்றி பெற்ற சிவக்குமாருககு வாழ்த்துகளை தெரிவித்தனர்.