Perambalur: “We will retrieve and restore the lands belonging to the Narikuravar community that were seized during the DMK regime,” pledges AIADMK candidate Ilambai R. Tamilselvan. He canvassed for votes by dancing alongside members of the Narikuravar community.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பபட்ட சர்க்கரை ஆலை எறையூர் சின்னாறு பகுதயில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தனது கூட்டணி கட்சியினருடன் எறையூர் நரிக்குறவர் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, வெற்றி திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர்.
அங்கு வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழச்செல்வன் பேசியதாவது: சரித்திர நாயகன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய விசுவாசிகள் நரிக்குறவர் சமுதாய மக்கள். அப்படிப்பட்ட மக்களைப் பாதுகாத்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
2021 வரை உங்களுக்குச் சொந்தமான இடத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் பாதுகாத்துக் கொடுத்தது. உங்கள் இடத்தை பறித்ததே திமுக ஆட்சி. திமுக ஆட்சிக்கு தக்க பாடம் புகட்டி எடப்பாடியாரை முதலமைச்சராக்க, எளியவனான எனக்கு இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டு வெற்றி பெறச் செய்கின்ற போது, பறிபோன உங்கள் நிலத்தை மீட்டுத் தருவோம், மீட்டுத் தருவோம் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
வாக்களிப்பீர்! இரட்டை இலைக்கே!
எங்கள் சின்னம்! இரட்டை இலை!
உங்கள் சின்னம்! இரட்டை இலை!
வெற்றிச் சின்னம்! இரட்டை இலை!
நமது சின்னம்! இரட்டை இலை!
புரட்சித் தமிழர் எடப்பாடியார்… வாழ்க!
புரட்சித் தமிழர் எடப்பாடியார்… வாழ்க!”
என வேட்பாளரும், கட்சியினரும், முழங்க நரிக்குறவர் சமூக மக்களும் முழங்கினர். உற்சாக வரவேற்பு அளித்த நரிக்குறவர்கள் நடனமாடி வரவேற்றனர். வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வனும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சற்று நேரம் நடனமாடி நன்றி தெரிவித்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க புறப்பட்டார். தே.ஜ கூட்டணி கட்சியினர் பலர் உடனிருந்தனர்.