பெரம்பலூர் வானிலை : பலத்த சூறாவளி காற்றுடன் பல இடங்களில் பரவலான மழை!

schedule
2024-06-18 | 16:12h
update
2024-06-18 | 16:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Weather: Widespread rain at many places with strong cyclonic winds!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் செட்டிக்குளம், சுற்றுவட்டாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் நகரில் பலத்த சூறாவளி காற்று சுற்றி சுற்றி சுழன்று வீசியாதால் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் அள்ளப்படாமல் கிடந்த மண், குப்பை, கூழங்கல் சாலையில் செல்வோர் கடைகள் மீதும் வீசின. பறந்த குப்பை மற்றும் மண்ணால், வாகன ஓட்டிகள் சற்று நேரம் அவதிப்பட்டனர். மேலும், சில மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தன. சூறாவளி காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல இடங்களில் விளம்பர பதாகைகள், வீழ்ந்தும், கிழிந்தும் தொங்கின. இவைகள் காற்றில் பறந்த விழுந்த போது நல்வாய்ப்பாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு, இயல்பு நிலை திரும்பியது. குளிர் காற்றால், வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.08.2026 - 21:10:47
Privacy-Data & cookie usage: