பெரம்பலூர்: நலவாரிய ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை ஏப்ரல் 30-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

schedule
2025-04-22 | 16:56h
update
2025-04-22 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Welfare pensioners advise to submit life certificate by April 30!

பெரம்பலூர் நலவாரிய ஓய்வூதியதார்கள் ஆயுள் சான்றை ஏப்ரல் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 20 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் கேட்புமனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு பெற்ற 60 வயது நிறைவடைந்த 4500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள், மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.

Advertisement

இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்கான ஆண்டு ஆயுள் சான்றை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள மூலம் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றை பதிவேற்றம் செய்ய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓய்வூதிய உத்தரவு நகல், ஆயுள் சான்று படிவம், புகைப்படம், வங்கிப் புத்தக நகல், தொழிலாளியின் நேரடி புகைப்படம் (ஆதார் அட்டையுடன்) தொழிற்சங்கம் அல்லது பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு 04328-299080 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மு. பாஸ்கரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளதாவது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 06:04:53
Privacy-Data & cookie usage: