பெரம்பலூர்: அந்தோ பரிதாபம்! வறுமையாலும், நோயாலும் 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீயிட்டு தற்கொலை!!

schedule
2025-09-15 | 16:15h
update
2025-09-15 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: What a pity! Due to poverty and illness, a mother set herself on fire with her 6-month-old baby!!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். டிரைவராக இவர் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் அவரது மனைவி கவிதா, சுமார் 6 மாத ஆண் கைக்குழந்தையுடன் வாழ வருமானமின்றி வறுமையாலும், நோயாலும் பெரும் துன்பப்பட்டும் தவித்து வந்துள்ளார். வாழ வழித் தெரியாமல் சிரமப்பட்டு வந்த கவிதா இன்று தனது கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் தீவைத்து தற்கொலை செய்து கொண்டனர். குழந்தையின் அலரலும், கவிதாவின் மரண ஓலத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தீக்கிரையாகினர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த தாய் மகனின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்தியா சுதந்திரம் 80 ஆண்டுகளாகியும் பெற்று இது போன்று வாழயில்லாமல் உயிரை மாய்த்துகொள்ளும் சம்பவம் ஒரு சாபக்கேடு!

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 02:51:32
Privacy-Data & cookie usage: