Perambalur: When the public experienced vomiting and dizziness, the Collector did not conduct an inspection; he only went for an inspection after receiving an order from a Secretariat official who had eaten at the hotel!
சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டார். அப்போது அவருக்கு உணவு பரிமாறிய விதம், சாப்பிட்ட உணவிலும் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதால், தற்போது பெரம்பலூர் கலெக்டராக இருக்கும் மிருணாளியிடம் ஹோட்டலை ஆய்வு செய்யுமாறு பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சகிதமாக சென்று ஹோட்டலை சுற்றி ஆய்வு செய்து அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
ஆனால், வேப்பந்தட்டை கிராமத்தில் அண்மையில் நடந்த திருமண விழாவில் தனியார் உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில், சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அப்போதெல்லாம் கலெக்டர் மிருணாளினி ஆய்வில் ஈடுபடவில்லை. பொதுமக்கள் நலனில் எந்த அளவிற்கு அக்கறையாக உள்ளார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுவும் பெயருக்குத்தான் ஆய்வு என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தலைமைச் செயலாக அதிகாரி உத்திரவிட்டதன் பேரில், பெரம்பலூரில் இயங்கிவரும் சைவ மற்றும் அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் உணவின் தரம், உணவுக்கூடம். சமையல் பொருட்கள் வைப்பறை சமையலுக்கு தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றதா, பாத்திரங்கள் சுடுநீரில் முறையாக கழுவப்படுகின்றதா. சமையலறை மற்றும் உணவகம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா உள்ளிட்ட இடங்களை கலெக்டர் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட உணவுப்பாதுகாப்புத்திட்ட நியமன அலுவலர் சுகந்தன். உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான டீக்கடைகளில் சுடுதண்ணீரில் டம்ளர்களை கழுவதில்லை. மாறாக பச்சை தண்ணீரில் சோப்பு கூட போட்டு கழுவதில்லை. டீ சாப்பிட்ட டம்ளர்களை உள்ளே விட்டு எடுத்த கைகளாலேயே மீண்டும் டீயை சப்ளை செய்கின்றனர். சப்ளையர்கள் நகங்களை முறையாக வெட்டாமல் அழுக்கு நகங்களுடன் பரிமாறுகின்றனர். முறையாக கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. டேபிள் துடைத்த கைகளுடனே துணியை பிடித்த கையைக் கழுவாமல் உணவுகளை பரிமாறுவதால் நிறையக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கும், சப்ளையர்களுக்களுமே வாக்குவாதம் நடக்கிறது. மேலும், புளித்த பழைய மாவில் புதிய மாவை சேர்க்கமலேயே இட்லி, தோசை செய்து கொடுப்பதால் சாப்பிடுவோர்கள், வயிற்றுவலி மற்றும் வாயு பிரச்சகைகளால் பெரும் அவதியடைகின்றனர். மேலும், சாப்பிட்ட இலையில் சட்னி சாம்பார் ஊற்றும் போது கரண்டி இலையை தொட்டுக் கொண்டே ஊற்றுவது என பல சுகாதாரமற்ற செயல்கள் நாள்தோறும் நடக்கிறது. இதனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதேயில்லை.