பெரம்பலூர்: ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி தொடரும்; குன்னம் எம்.எல்.ஏ சிவசங்கர் நன்றி அறிவிப்பில் பேச்சு!

schedule
2026-05-16 | 15:04h
update
2026-05-16 | 15:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “Whether as the ruling party or the opposition, public service will continue,” says Kunnam MLA Sivasankar in his speech of gratitude.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதியில் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு தனது கட்சியினருடன் சென்று ஊர் ஊராக நன்றி தெரிவித்தார். அப்போது அவருக்கு கட்சியினர் பொன்னாடை போர்த்தியும், பட்டாசுகள் வெடிகள் முழங்க வரவேற்றனர். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

பல்வேறு திட்டங்களைத் தந்தார்கள். நம்முடைய தொகுதிக்கு ஒரு அமைச்சர் பொறுப்பை வழங்கிய காரணத்தினால், இன்றைக்கு நம்முடைய குன்னத்திலே ஒரு பேருந்து டெப்போ அமைக்கின்ற சூழலும், புதிய பேருந்து வழித்தடங்களை இயக்கி, பழைய பேருந்துகளை எல்லாம் மாற்றி புதிய பேருந்துகளாக இயக்குகின்ற வாய்ப்பும் கிடைத்தது.

Advertisement

இன்றைக்கு ஆட்சி அமையாத சூழலாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்திருக்கின்றோம். நம்முடைய இளந்தலைவர், மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று இருக்கின்ற நிலையிலே, அவருடைய தலைமையிலே சட்டமன்றத்தில் நம்முடைய தொகுதியின் குரலாக, நம்முடைய பகுதியின் குரலாக, உங்கள் குரலாக நான் ஒலிப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்திலே அளித்துக் கொள்கிறேன்.

மூன்றாவது முறையாக, குன்னம் தொகுதியிலே இன்றைக்கு இந்த வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்றால், அது உங்களுடைய அன்போடுதான். உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி, இந்த வாய்ப்பை மீண்டும் மீண்டும் வழங்கி இருக்கின்ற உங்களுக்கு என்றைக்கும் நன்றி கடனோடு இருப்பேன்.

குறிப்பாக, அந்தூர் கிராமம் தாய் கிராமமாக இருந்து என்றைக்கும் ஆதரவு தருகின்ற கிராமம் என்ற வகையில் எனக்கு இந்த வரவேற்பையும், தேர்தல் நேரத்திலே அந்த உச்சி வெயிலிலே நீங்கள் காத்திருந்து வரவேற்பு கொடுத்தது போல, இன்றைக்கு மழை வருகின்ற சூழலிலும் நீங்கள் காத்திருந்து இந்த நன்றியறிவிப்பு நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதற்கு தாய்மார்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய பணி என்றைக்கும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி தொடரும் என்ற வகையில், என்றைக்கும் உங்களுடைய வீட்டுப் பிள்ளையாக, உங்கள் தொண்டனாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி, இந்த சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, வணக்கம் என பேசினார்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சி.காட்டுராஜா, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு. நீலமேகம், ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, திமுக ஐடி விங் ரமேஷ், உள்ளிட்ட திமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, கொத்தவாசல், புதுக்குடிசை, சின்னவெண்மணி, பெரியவெண்மணி, கொளப்பாடி, துணிச்சப்பபாடி, புதூர், புதுவேட்டக்குடி, வரகூர், கிளியூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2026 - 15:58:01
Privacy-Data & cookie usage: