பெரம்பலூர்: கடன் தவணை செலுத்த முடியாததால் நிதி நிறுவன ஊழியர்களுக்கு பயந்து பெண் தற்கொலை!

schedule
2026-09-25 | 15:48h
update
2026-09-25 | 15:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman commits suicide out of fear of finance company employees after failing to pay loan installments!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள புதுக்குறிச்சியை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை. இவரது மனைவி கலைச்செல்வி (46). இவர்களுக்கு பூமதி என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி, மதுபாலன் மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணமூர்த்தி எழுந்து சமையல் செய்வதற்காக அருகில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள இரும்பு பைப்பில் கலைச்செல்வி இறந்து நிலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்கள் மற்றும் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்..

Advertisement

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கலைச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர். நடத்திய விசாரணையில், புதுக்குறிச்சியில் வீடு விரிவாக்க பணிக்காக கலைச்செல்வி கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மகன் மதுபாலன் பெயரில் உள்ள வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து பெரம்பலூரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் தவணைத் தொகையாக ரூ.9,247-யை செலுத்தி வந்துள்ளார். கடந்த 8 மாதங்களாக தவணை செலுத்தியவர்கள், நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான தவணை தொகையை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் தொலைபேசி மூலம் தவணை தொகையை செலுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கலைச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலம், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தவணைத் தொகை செலுத்த முடியாததால் பெண் ஒருவர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.09.2026 - 16:10:36
Privacy-Data & cookie usage: