பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சாவு!

schedule
2016-04-27 | 14:39h
update
2024-07-07 | 15:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman dies after being hit by an unidentified vehicle!

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி மனைவி இருசாயி (60) இவர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் சின்னாறு பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்களமேடு போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து, விபத்திற்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 08:28:19
Privacy-Data & cookie usage: