பெரம்பலூர்: பைக் சக்கரத்தில் சேலை சிக்கியதில் சாலையில் விழுந்த பெண் பலி!

schedule
2026-03-09 | 19:05h
update
2026-03-09 | 19:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman dies after falling on the road after her saree gets caught in the bike wheel!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி அருகே உள்ள கடம்பூரை சேர்ந்தவர் செல்வராணி. இவரது மகன் பத்மநாபன. இருவரும் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். எசனை அருகே உள்ள அன்னமங்கலம் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது செல்வராணியின் சேலை பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் பின்னால் வந்த லாரியின் முன் சக்கரத்தில் மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பத்மநாபனுக்கு காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார் இறந்த செல்வாரணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் சேலை சிக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 19:28:40
Privacy-Data & cookie usage: