பெரம்பலூர்: பைக் மோதியதில் பெண் பலி! மருத்துவமனையை முற்றுயைிட்ட உறவினர்கள்!

schedule
2025-09-02 | 16:10h
update
2025-09-02 | 16:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman dies in bike accident! Relatives blockade hospital!

பெரம்பலூர் அருகே பைக் மோதிய விபத்தில், படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், அவசர சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லையென குற்றம் சாட்டி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பானுமதி(65). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே உடல்நலக்குறைவால் கணவர் விஜயகுமார் உயிரிழந்த நிலையில் செஞ்சேரியில் உள்ள மகனுடன் பானுமதி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாடுகளுக்கு தீவனம் போட்டு விட்டு, வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மூதாட்டி பானுமதி மீது பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகாதேவன்(26) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதிய விபத்தில் பலத்த காயம்டைந்த பானுமதியை உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள், மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் பானுமதிக்கு சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரத்துக்கு பிறகு வந்த மருத்துவர், பானுமதியை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால், ஆத்திரமடைந்த பானுமதியின் உறவினர்கள் அவரது சடலத்தை அதே இடத்தில் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பானுமதி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சவ கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்துக்கு காரணமான இருசக்கர வாகனத்தை மதுபோதையில் ஓட்டி வந்து மூதாட்டி மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகாதேவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2026 - 21:14:13
Privacy-Data & cookie usage: