பெரம்பலூர்: அடையாளம் தெரியாத வாகனம்

கார் மோதிய விபத்தில் பெண் பலி; 4 பேர் காயம்!

schedule
2024-07-06 | 16:48h
update
2024-07-07 | 14:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Woman dies in car collision with unidentified vehicle; 4 injured!

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அவர்களது காரில் புறப்பட்டனர். காரை இளம்பரிதி ஓட்டி வந்தார்.

Advertisement

கார் இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யோகப்பிரியா பரிதாபமாக உயிரிழைந்தார்.

காரில் பயணித்த இளம்பரிதி அவரது மகன்கள் இனியன் (6), இமையன் (3) மற்றும் அவரது உறவினர் திண்டுக்கல் மாவட்டம் புதூரை சேர்ந்த வீரபாண்டி மகன் தங்கபாண்டி (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் 4 பேரும் பெரம்பலூர் சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 07:24:35
Privacy-Data & cookie usage: