பெரம்பலூர்: முறையாக குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!

schedule
2025-09-29 | 15:21h
update
2025-09-29 | 15:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Women block road with empty pods demanding proper supply of drinking water!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டார்மங்கலம் 7 வார்டு மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் கடந்த சில நாட்களாக தெரு இணைப்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் , ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் ஆலத்தூர் – துறையூர் செல்லும் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமதான பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆலத்தூர் – துறையூர் சாலையில் சுமார் அரை நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.05.2026 - 21:32:14
Privacy-Data & cookie usage: