பெரம்பலூர்: குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

schedule
2026-10-05 | 13:52h
update
2026-10-05 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Women staged a road blockade with empty pots, demanding drinking water!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் யூனியனுக்கு உட்பட்ட (வயலப்பாடி) வ.கீரனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று தீடீரென திட்டக்குடி – அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம் குறித்து பலமுறை வேப்பூர் யூனியன் ஆபீசிற்கும், கலெக்டர் ஆபீசிற்கும் பலமுறை தகவல் தெரிவித்தும், மனுவாக கொடுத்தும் குடிநீர் வழங்க இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தண்ணீர் இல்லாததால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. அதோடு, காலை நேரங்களில் தங்கள் குழந்தைகளை சரியான நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப முடியவில்லை எனவும் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நாளை முதல் உங்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை விலக்கி கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.10.2026 - 13:53:23
Privacy-Data & cookie usage: