பெரம்பலூர்: அட்ஷயா சூப்பர் மார்க்கட் CSR நிதியில் நக்கசேலம் ஏரி ஆழப்படுத்தும் பணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்!

schedule
2026-06-25 | 17:40h
update
2026-06-25 | 17:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Work to deepen Nakkaselam Lake using Akshaya Supermarket’s CSR funds; Collector inaugurates the project.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தில் 118 ஏக்கர் பரப்பளவுள்ள 2 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியினை பெரம்பலூர் அக்‌ட்ஷய சூப்பர் மார்க்கட்டின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை கலெக்டர் ஷரண்யா தொடங்கி வைத்தார். இந்த ஏரி ஆழப்படுத்துவதால் புது அம்மாபாளையம், நக்கசேலம், ஈச்சம்பட்டி, டி.களத்தூர் ஆகிய கிராமங்களில் வசித்து வரும் 1,600 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, ஆலத்தூர் வட்டாட்சியர் கவிதா, அட்சயா சூப்பர் மார்க்கட் பங்குதாரர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 18:31:50
Privacy-Data & cookie usage: