Perambalur: Worker dies of electrocution!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மகேஷ்குமார் (50). இவர் பந்தல் மற்றும் மைக் செட் கட்டும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பொம்மாயி (70) இறந்து விட்டார். இவரது துக்க நிகழ்ச்சிக்காக பந்தல் போடுவதற்காக மகேஷ்குமார் சென்றார். அப்போது, அங்கிருந்த மின்சார பெட்டியின் மீது கிடந்த வயரை எடுத்து எடுத்து பந்தல் மீது போட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வயர், மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது விழுந்தது. இதில் பாய்ந்த மின்சாரம் மகேஷ்குமாரை தாக்கியதுடன் தூக்கி வீசியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிறுவாச்சூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையின் போது மகேஸ்வரன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தினர். மேலும், மகேஸ்குமாரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் துக்க வீட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது, துக்க வீட்டிற்கு பந்தல் போட வந்தவர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.