பெரம்பலூர்; உலக எய்ட்ஸ் தினம்; பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்.

schedule
2025-12-01 | 06:32h
update
2025-12-01 | 06:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur; World AIDS Day; Awareness rally on sexually transmitted diseases: Collector inaugurated.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ந.மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய அவர், ஓசை கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார். இந்த பேரணி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி வெங்கடேசபுரம், கிருஷ்ணா தியேட்டர் சங்குப் பேட்டை, காமராஜர் வளைவு வழியாக ஆத்தூர் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கொ. மாரிமுத்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/ மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, துணை இயக்குநர் (காசநோய்) நெடுஞ்செழியன், மாவட்ட திட்ட மேலாளர் (பொ) சுமதி, தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் விவேகானந்தன், ஆற்றுப்படுத்துநர் பழநிவேல் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவை பிரிவு ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை உள்ளிட்ட பல தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 10:47:06
Privacy-Data & cookie usage: