பெரம்பலூர்: உலக தாய்பால் தின விழா ; சுமார் ஒன்றரை மணி நேரம் காலதாமதாக வந்த கலெக்டர்; கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் அவதி!

schedule
2026-08-05 | 08:43h
update
2026-08-05 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: World Breastfeeding Day event; Collector arrives about an hour and a half late; pregnant women, children, and mothers left in distress!

உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு, இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு சங்குப்பேட்டை அருகே உள்ள அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் நடந்தது. அதில், கர்ப்பிணி பெண்களுக்கு சத்து உணவு வகைகள், இணை உணவுகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் சரண்யா தலைமையில் காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இன்று காலை சுமார் 9 மணியில் இருந்தே, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி அலுவலர்கள் ஆவலுடன் காத்து இருந்து இருந்தனர். ஆனால், கலெக்டர் உரிய நேரத்திற்கு வராமல் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமத்திற்கு பின்பு அங்கன்வாடி மையத்திற்கு காலை 11.06 மணிக்கு வந்தார். பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தாய்பாலின் அருமையை எடுத்துக் கூறியதுடன், தானும் தாய்பால் தானம் (கொடை) வழங்கியதாகவும், பெண்களுக்கான ஹார்மோன் குழந்தை பிறந்த உடன் ஒரு எரிச்சல், எதைக்கண்டாலும், சாப்பிட பிடிக்காது, அதோடு பிரசவம் ஆன பின்பு பார்க்க வருகிறவர்கள் குழந்தையை மட்டுமே பார்ப்பார்கள், தாயை அதிகம் கவனிக்கமாட்டார்கள், எனவே, சத்தான உணவு சாப்பிட்டு தாய்மார்கள் உடலையும்,மனதையும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், பெண்களுக்கு உடலில் எலும்புகள் தான் மிக பலமாக இருக்க வேண்டும், புரோட்டின் கலந்து உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 40 வயதிற்கு பின்பு முழங்கால் வலி போன்றவற்றை தவிர்க்க பிடிக்கிறதோ இல்லையோ சாப்பிட்டு உடலை அக்கறையுடன் பாராமரித்து கொள்ள வேண்டும் என பேசினார். பின்னர், அங்கிருந்த தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு சத்து உணவு வகைகள், இணை உணவுகளை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட அலுவலர், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பிரேமா, பூமா, பெரம்பலூர் தாசில்தார் பழனிச்செல்வன், நகராடசி கவுன்சிலர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 09:58:18
Privacy-Data & cookie usage: