பெரம்பலூர்: குரூப் 2, 2ஏ க்கு எழுத்துத் தேர்வுகள்; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-03 | 17:44h
update
2026-02-03 | 17:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Written examinations for Group 2 and 2A; Collector information!

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் எதிர்வரும் 08.02.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தொகுதி- II மற்றும் II -A க்கான எழுத்துத் தேர்வுகள் காலை மற்றும் மதியம் ஆகிய இரு வேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது எனவும், இத்தேர்வில் மொத்தம் 149 நபர்கள் தேர்வு எழுதவிருப்பதாகவும், மேற்படி தேர்விற்கு தேவையான வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்வதற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஆயுதம் தாங்கிய காவலருடன் கூடிய 1 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

போட்டித்தேர்வு எழுதும் நபர்கள் முற்பகல் தேர்விற்கு காலை 9.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் காலை 9.00 மணிக்கு பிறகு வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள், பிற்பகல் தேர்விற்கு பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு வரும் நபர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், தேர்வு எழுதும் நபர்கள் கைபேசி உள்ளிட்ட தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட உபகரணங்களை எடுத்துவர அனுமதியில்லை என்றும் கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.02.2026 - 17:50:01
Privacy-Data & cookie usage: