பெரம்பலூர்: முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-15 | 17:18h
update
2025-04-15 | 17:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: You can apply for the Chief Minister’s State Youth Award; Collector informs!

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” (CHIEF MINISTER’S STATE YOUTH AWARD – 2025) ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற விருப்பமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த

Advertisement

15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2024 (01.04.2024) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31, 2025 (31.03.2025) அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். ( சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பெரம்பலூர் அவர்களை அணுகி சான்றிதழ்களை சரிபார்ப்பிற்காக ஒப்படைக்க வேண்டும்.

 பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறும், இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 19:08:13
Privacy-Data & cookie usage: