பெரம்பலூர்: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்!

schedule
2024-11-29 | 13:15h
update
2024-11-29 | 13:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: You can apply for the Father Periyar Award for Social Justice: Collector information!

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் ) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

Advertisement

2024 -ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம்.

தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 20.12.2024 அன்று விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாகும் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.08.2026 - 18:03:33
Privacy-Data & cookie usage: