பெரம்பலூர்: இளம்பெண் தற்கொலை! சப்-கலெக்டர் விசாரணை!

schedule
2016-05-03 | 20:24h
update
2024-07-07 | 15:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Young girl committed suicide! Sub-Collector Inquiry!

பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு கிராமத்தில் மாமியார் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பீல்வாடி அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் (30), செல்வி (24), தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் நடைபெற்று அனுஷ்கா(2), என்ற பெண் குழந்தை உள்ளது.

Advertisement

இதனிடையே கடந்த 6 மாத காலமாக சுரேசும், அவரது தந்தை ராமசாமியும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் மாமியார் ராஜாம்மாளுடன் செல்வியும், அவரது குழந்தை அனுஷ்காவும் வசித்து வந்தனர். இந்நிலையில் மாமியாருக்கும் மருமகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த செல்வி நேற்று முன்தினம் இரவு தனது குழந்தையை தூக்கி கொண்டு வேப்பூரிலுள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக பொன்னகரம் கிராமத்திலுள்ள பஸ் டாப்பிற்கு சென்றவர் பஸ் கிடைத்திடாததால் மீண்டும் கனவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையறிந்த அவரது மாமியார் ராஜாம்மாள் பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றாய் அப்புறம் ஏன் இங்கு வந்தாய் என பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வி நள்ளிரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் இன்று அதிகாலை ராஜாம்மாளுக்கு தெரிய வர அவர் மங்களமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுரேஷ், செல்வி ஆகிய இருவரும் திருமணம் செய்து 4 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்துசப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 19:05:48
Privacy-Data & cookie usage: