பெரம்பலூர்: மைனர் பெண் காணமல் போன வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது!

schedule
2026-07-24 | 20:04h
update
2026-07-24 | 20:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Young man arrested under the POCSO Act in connection with the disappearance of a minor girl.

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணான 17 வயது கல்லூரி மாணவி காணாமல் போனதாக கடந்த 22ம் தேதி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மாணவி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் இருப்பதை உறுதி செய்த போலீசார் அங்கு செனறு மாணவியை மீட்டு வந்தனர்.

Advertisement

இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் வினோத்குமார் (20) என்பவரை கைது செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மைனர் பெண்ணிற்கு உரிய ஆலோசனைகள் அறிவுரைகளை வழங்கிய போலீஸார் அவரை உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.07.2026 - 20:38:36
Privacy-Data & cookie usage: