பெரம்பலூர்: கல்லால் அடித்து வாலிபர் கொலை: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி சாலை மறியல்!

schedule
2026-10-01 | 15:25h
update
2026-10-01 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Young man beaten to death with a stone; road blockade demanding the arrest of all the culprits!

பெரம்பலூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராம பகுதியில் மூடப்பட்ட கல்குவாரி ஒன்றில் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மருவத்தூர் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் கவுள்பாளையம் காளியம்மன் நகரை சேர்ந்த விக்னேஸ்வரன், சரணவன் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெற்றிவேல் தனது நண்பர்களுடன் மது அருந்தி போதையில் இருந்த போது ஏற்பட்ட வாக்குவாத்தில் விக்னேஸ்வரன் போதையில் தனது நண்பன் என்றும் பாராமல், கல்லால் தாக்கி கொலை செய்தாக போலீசில் வாக்குமூலம் அளித்ததாகவும், உடன் சிலர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் தொடர்புடையதாகவும் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இறந்த வெற்றிவேலின் உறவினர்கள் மற்றும் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர் – துறையூர் சாலையில் அரசு மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மது அருந்த சென்ற இடத்தில் சக நண்பர்களே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.10.2026 - 15:34:25
Privacy-Data & cookie usage: