பெரம்பலூர்: குடும்பத் தகராறில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை!

schedule
2026-05-22 | 10:25h
update
2026-05-22 | 10:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Young Man Commits Suicide by Consuming Poison Following Family Dispute!

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜா (32). இவர் அப்பகுதியில் சிக்கன் ரைஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி காலை வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ராஜா களைக்கொல்லியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்து அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 03:39:42
Privacy-Data & cookie usage: