பெரம்பலூர்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்ததில் பலி!

schedule
2026-07-07 | 08:59h
update
2026-07-07 | 09:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Young woman whose marriage had been fixed dies after accidentally falling into a well!

பெரம்பலூர் மாவட்டம், காரை அருகே உள்ள தெரணி கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி (27). இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தந்தையும் மகளும் அவர்களது வயலுக்கு சென்று மாடுகளை பராமரித்தனர். பாலசுந்தரம் மாட்டுப்பாலை எடுத்துக் கொண்டு காலை சுமார் 6.30 மணி அனவில் பண்ணையில் பால் ஊற்றுவதற்காக சென்று விட்டார்.

Advertisement

மாட்டு சாணங்களை அள்ளிவிட்டு வீட்டிற்கு வந்து விடுவதாக கூறிய மகாலட்சுமி நீண்ட நேரமாகியும் வராததால் மீண்டும் வயலுக்கு சென்று பார்த்த போது, அவரது மகளின் செருப்பு மட்டும் கிணற்றின் மேற்பகுதியில் கிடந்துள்ளது. கிணற்றில் தவறி விழுந்திருக்க கூடும் என்று எண்ணிய அவர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் வீ.பழனிச்சாமி. முன்னணி தீயணைப்பு வீரர் இன்பரசன் உள்ளிட்ட வீரர்கள் குழுவுடன் கிணற்றில் இறங்கி தேடி இறந்த நிலையில் மகாலட்சுமியை மீட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எஸ்.எஸ்.ஐ செந்தாமரை கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன இளம்பெண் மகாலட்சுமிக்கு தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.07.2026 - 09:33:00
Privacy-Data & cookie usage: