பெரம்பலூர்: லாரியில் மண் கடத்திய வாலிபர் கைது! தனிப்படை போலீசார் நடவடிக்கை!!

schedule
2025-03-20 | 16:21h
update
2025-03-20 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Youth arrested for smuggling soil in a lorry! Special police action!!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்திற்கு உரிய லாரிகளில் மண் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை படை போலீசார் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது குன்னம் அருகே, கவுள்பாளையம் கிராமத்தில் இருந்து குன்னத்திற்கு அனுமதியின்றி டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக் கொண்டு வந்த கவுள்பாளையத்தை சேர்ந்த பழனிமுத்து மகன் அர்ஜுன் (25) என்பவரை பிடித்து குன்னம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ. 16,000 மதிப்புள்ள 7.5 யுனிட் மணல் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அர்ஜுனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

பொதுமக்கள், தங்களது பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் திருட்டு, கள்ளச் சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் போலீசர் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.06.2026 - 05:20:42
Privacy-Data & cookie usage: