பெரம்பலூர் : வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி!

schedule
2024-02-29 | 17:38h
update
2024-07-07 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Youth arrested for trying to break into house!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த தொண்டமாந்துறையை சேர்ந்த ராஜு மகன் பாலகிருஷ்ணன் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் 4 ரோடு நோக்கி நேற்றிரவு வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு பின்னால். தனியார் டயர் தொழிற்சாலைக்கு வேலைக்கு பைக்கில் பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அழகநாதன் மகன் ஆனந்தன் என்பவர் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக முன்னே சென்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மீது மோதி, வலது புறம் புறமாக பைக்கை திருப்பும் பின்னால் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பலியானார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் இரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், மினிலாரி டிரைவரான வேப்பந்தட்டை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல நேற்றிரவு வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் செல்வம் (31) பைக்கில் நேற்றிரவு 11 மணி அளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எறையூர் வழியாக நன்னை செல்வதற்காக சென்றுக் கொண்டிருந்தார்.

பைக் வல்லாபுரம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்களமேடு போலீசார், அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு வாலிபர்கள் வெவ்வேறு விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.08.2026 - 12:59:09
Privacy-Data & cookie usage: