பெரம்பலூர்: ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து ஆர்பாட்டம் செய்த வழக்கில் வாலிபர் சங்க தலைவர்கள் விடுதலை! நீதிமன்றம் உத்தரவு!!

schedule
2026-09-11 | 13:53h
update
2026-09-11 | 13:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Youth association leaders acquitted in case regarding protest against failure to remove encroachments; Court issues order.

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் பஸ் ஸ்டாண்டில் சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் பெரம்பலூர் மாவட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய பேருந்து நிறுத்துமிடமாகும். பேருந்து நிறுத்தும் இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் விளைவாக பெரம்பலூர் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார். ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கலெக்டர் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிட கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Advertisement

ஆனால் அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கை.களத்தூர் போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், பிரியா, வாலிபர் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், வேல்முருகன், விசிக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் தர்மலிங்கம், பிச்சை மணி, சின்னசாமி, முருகன் ஆகிய 10பேர் வழக்கு பதிவு செய்து வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று வேப்பந்தட்டை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி இ.தெய்வீகன் குற்றம் நிருபிக்கபடவில்லை என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க தலைவர்கள் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆஜராகி வழக்கை நடத்தி விடுதலை பெற்று தந்த மூத்த வழக்கறிஞர் அ.தமிழரசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.09.2026 - 13:56:37
Privacy-Data & cookie usage: