பெரம்பலூர் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

schedule
2023-06-20 | 18:49h
update
2023-06-20 | 18:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur youth hanged himself!

பெரம்பலூர் துறைமங்கலம், நியூ காலனி பள்ளிவாசல் தெருவில், சுப்பிரமணி என்பவரது வீட்டில், வாடகைக்கு தங்கி இருந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த ராஜா(38), என்கிற ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியதை அறிந்து, அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழுகிய நிலையில் இருந்த ராஜாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராஜாவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் விவகாரத்து பெற்ற நிலையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான ராஜா மனமுடைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 02:57:57
Privacy-Data & cookie usage: