17 வயது மைனர் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, துபாய் சென்ற பெரம்பலூர் வாலிபர், விமான நிலையத்தில் கைது!

schedule
2022-07-03 | 18:13h
update
2022-07-03 | 18:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur youth who left a 17-year-old minor girl pregnant and went to Dubai, arrested at the airport!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பால்ராஜ் (24). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு துபாய் நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர்.

Advertisement

மகளிர் போலீசார், பால்ராஜ் குறித்த விவரத்தை அனைத்து விமான நிலையங்களின் குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பால்ராஜ் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனையில் சிக்கி கொண்டார். பின்னர், அவர் திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் பால்ராஜை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரை வரவழைத்து, ஒப்படைத்தனர். பால்ராஜை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:01:10
Privacy-Data & cookie usage: