4th_yr

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட பெரம்பலூர் நான்கு ஆண்டு சாதனை மலரை ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டார்.

பெரம்பலூர் : மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட பெரம்பலூர் மாவட்ட நான்காண்டு சாதனைகளை விளக்கும் கையேடுகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினிகள், மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், பெண்களின் நலன்காக்கும் வகையில் திருமண உதவியுடன் 4கிராம் தங்கம் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்செல்வன் ஆகியோரிடம் வழங்கினார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:

தமிழக முதலமைச்சர் பொற்கால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டாலும், பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் நமது பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளார். குறிப்பாக செட்டிகுளத்தில் சின்ன வெங்காய வணிக வளாகம், பாடாலூர் கிராமத்தில் சுமார் 22.09 ஏக்கர் நிலப் பரப்பில் 36.00 கோடி மதிப்பீட்டில் புதிய ஆவின் பால் பெருக்கு நிலையம், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டைகளில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தாய்சேய் மற்றும் மகப்பேறு மருத்துவப்பிரிவு, ரூ.36.37 கோடி மதிப்பில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த விசுவகுடி நீர்த்தேக்கம் என்று பல்வேறு சிறப்புத்திட்டங்களை வழங்கியிருக்கிறார்கள். அப்படி கடந்த நான்காண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொகுப்பாக இந்தக் கையேடு வெளிவந்திருக்கிறது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர், மகளிர் திட்ட அலுவலர், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளிடம் நான்காண்டு சாதனைப்புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 121 ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும், மாவட்டம் முழுவதும் உள்ள 41 கிளை மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு மாவட்ட நூலக அலுவலரிடமும், சாதனை விளக்கப் புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.சகுந்தலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செய்தி மக்கள் தொடர;பு அலுவலர் க.பாவேந்தன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், வெண்ணிலா, ஜெயலட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, ஆதிதிராவிடர் நல அலுவலர் இராஜேந்திரன், சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆறுமுகம், வேளாண்மை பொறியில்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!