individual_toilet_daresh
பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டத்தை திறந்த வெளிக் கழிப்பிடமில்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பேரளி, சித்தளி மற்றும் கொளப்பாடி ஆகிய ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று (03.01.2015) நேரில் சென்று பொதுமக்கள், மாணவ மாணவிகளிடம் அனைவரும் தங்கள் இல்லங்களில் தனிநபர் கழிப்பறை கட்ட முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

சுற்றுச்சூழலை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் வைத்துக்கொள்வது நமது கடமையாகும். வளர;ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நாம் நமது வாழ்க்கைப் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். ஆனால் ஒர பழக்கத்தை மட்டும் மாற்ற தயங்குகிறோம்.அது திறந்த வெளியில் மலம்கழிப்பது. இதனால் நமது சுகாதாரம் சீரழிகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கு இது பழக்கமாகிவிட்ட ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்றைய சந்ததியினருக்கு திறந்த வெளியில் மலம் கழிப்பது மிகவும் முகம் சுழிக்க வைக்கும் ஒன்றாகும்.

இடவசதி இல்லாத நபர்களுக்கு பொது இடத்தில் கழிப்பறை கட்டித் தரப்படும்

இதை பெரியவர்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 ஊராட்சிகளில் 100 சதவீதம் தனிநபர் இல்ல கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஏன் நாம் அனைத்து ஊராட்சிகளிலும் செய்து காட்ட முடியாது? சிலபேர் எங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்று கூறுகிறார்கள். இடவசதி இல்லாத நபர்களுக்கு ஊராட்சியில் உள்ள பொது இடத்தில் தனிநபர் கழிப்பறைகள் அமைத்து தரப்படும்.

பொதுமக்களின் நலன்கருதி தனிநபர் கழிப்பிடம் கட்ட மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவித்தொகையாக ரூ.12,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதிதிட்டத்தின் வாயிலாக 15 நாட்களுக்கான ஊதியமாக ரூ.2,745-ம், கழிவறை கட்டிய பிறகு மீதமுள்ள ரூ.9,255 தொடர்புடைய ஊராட்சியின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தங்கள் வீட்டில் தனிநபர் கழிப்பறைகளை அமைத்தே தீருவோம் என்று உறுதி ஏற்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் தயவுசெய்து அனைவரும் தங்கள் வீட்டில் தனிநபர் கழிப்பறைகளை அமைத்தே தீருவோம் என்று உறுதி எடுக்க வேண்டும். அனைவரும் ஒத்துழைத்தால்தான் நமது பெரம்பலூர் மாவட்டத்தை திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்ற முடியும், என மாவட்ட ஆட்சியர் பேசினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!