Collector informs to inform the District Emergency Control Center about the information of Perambalur District students studying in Ukraine!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக ஊடக செய்திகளின் வாயிலாக அறியப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து கல்வி பயிலும் நோக்கில் மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். இதுகுறித்து, பணிகளை ஒருங்கிணைக்க பெரம்பலூர் மாவட்ட தொடர்பு அலுவலராக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உக்ரைன் நாட்டில் உள்ளவர்கள் விவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை 94450 08145 என்ற கைபேசி எண்ணிலும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1077, 1800-425-4556 என்ற இலவச எண்ணிலும், 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!