Crops grown in the district karukiyat in Perambalur the death of a farmer. Government complacency

பெரம்பலூர் அருகே 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, பருத்தி மக்காச்சோளம் வறட்சியால் காய்ந்து கருகியதால் மனஉளைச்சலுக்கு ஆளான விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 59), விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பார்த்து வந்த வேலைக்கு வி.ஆர்.எஸ் கொடுத்து விவசாயம் பார்த்து வந்தார். 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்து இருந்தார். இந்த ஆண்டு பருவ பொய்த்து போனதால் பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காய்ந்து கருகி வருகிறது. இதே போன்று கணேசனின் வயலும் காய்ந்து கருகி வருவதை நேற்று பார்த்து வேதனை அடைந்த அவர் மனமுடைந்து அங்கேயே நெஞ்சை பிடித்து கொண்டு வயலில் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்க்ம்பத்தினர், மற்றும் குடும்பதினர்கள் உடனடியாக அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையிலும் இன்று மதியம் பரிதாபமாக கணேசன் உயிரிழந்தார். விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர்சேதங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளதாகவும், ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் காலதாமதான முடிவு பல விவசாயிகள் இறக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது என்பது வேதனைக்குரிய தகவலாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!