Development projects in the field of horticulture for the benefit of farmers in the special camp will be held from July 20 to register names – Perambalur collector

தோட்டக்கலைத் துறை அபிவிருத்தி திட்டங்களில் பயன்பெற ஜுலை 20-ல் நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் – பெரம்பலூர் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

kalaimalar.com_col_2

பெரம்பலூர் மாவட்டத்தில், தோட்டக் கலைத் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்திற்கு 2016-17-ம் ஆண்டிற்கு ரூ.420.774 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், மா அடர் நடவிற்கு எக்டருக்கு ரூ.9840 – என 10 எக்டருக்கு ரூ.0.984 இலட்சமும், வீரிய காய்கறிகள் சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு ரூ. 20 ஆயிரம் – என 600 எக்டருக்கு ரூ.120 இலட்சமும், மிளகாய் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.12000 ; என 50 எக்டருக்கு ரூ.6.00 இலட்சமும் திசு வாழை சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.37,500 என 15 எக்டருக்கு ரூ.5.625 இலட்சமும், உதிரி மலர்கள் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.16,000 என 5 எக்டருக்கு ரூ.0.80 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்தின்கீழ் பாலித்தின் பசுமைக் குடில் அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.467 வீதம் 2,000 சதுர மீட்டருக்கு ரூ.9.35 இலட்சமும், நிழல்வலை அமைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355 வீதம் 6,000 சதுர மீட்டருக்கு ரூ.21.3 இலட்சமும், நிலப்போர்வை அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.16,000 – வீதம் 30 எக்டருக்கு ரூ.4.80 இலட்சமும் மானியமாக வழங்கப்படவுள்ளது.

அயல்மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் தேன் கூடு மற்றும் தேனீ குடும்பம் வழங்க 400 எண்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு எண்ணிற்கு ரூ.1,600 மானியமும், தேன் பிரிக்கும் கருவி ரூ.800 மானியத்தில் 40 எண்களும் வழங்கப்படவுள்ளது. குறைந்த செலவிலான 25 மெட்ரிக் டன்கள் கொள்ளளவு உடைய வெங்காய சேமிப்பு அமைப்பு கட்ட 160 எண்களுக்கு ரூ.140 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சிப்பம் கட்டும் அறை கட்ட 9 எண்களுக்கு ரூ.18.00 இலட்சமும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

அங்கக பண்ணையத்தின் கீழ் மண்புழு தொட்டி நிரந்தர அமைப்பு அமைத்து மண்புழு உரம் தயாரிக்க 5 எண்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ரூ.50,000 வீதம் ரூ.2.50 இலட்சமும், மண்புழு உரப்படுக்கை 5 எண்களுக்கு ஒன்றுக்கு ரூ.8,000 வீதம் ரூ.0.40 இலட்சமும் மான்யம் வழங்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மைக்கு 100 எக்டர் இலக்கு பெறப்பட்டு ஒரு எக்டருக்கு ரூ.500 வீதம் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.
பண்ணைக்குட்டை அமைக்க 1 எண் இலக்கு பெறப்பட்டு ரூ.20.00 இலட்சம் மானியத்தில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு மாநிலத்திற்குள் பயிற்சியளிக்க நபர் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் 100 விவசாயிகளுக்கு ரூ.2.00 இலட்சமும், வெளி மாநிலத்தில் விவசாயிகள் பயிற்சிக்கு நபர் ஒன்றுக்கு ரூ.10,500 வீதம் 40 விவசாயிகளுக்கு ரூ.4.2 இலட்சமும், வெளி மாநில கண்டுணர் சுற்றுலாவிற்கு நபர் ஒன்றுக்கு ரூ.5,000 வீதம் 6 நபர்களுக்கு ரூ.30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

20 குதிரைத் திறன்வரை சக்தி கொண்ட டிராக்டர் ஒன்றுக்கு ரூ. 75,000 மானியத்தில் 5 எண்களும், பவர் டில்லர் ரூ.60,000 மானியத்தில் 10 எண்களும், கைத்தெளிப்பான் ரூ.500 மானியத்தில் 10 எண்களும், விசைத்தெளிப்பான் ரூ.2,500 மானியத்தில் 25 எண்களும் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

சிறப்பு தொழில் நுட்பங்கள் மூலம் பண்ணையில் குறைபாடு சரிசெய்ய ரூ.2,000 மானியத்தில் 1,250 விவசாயிகளுக்கு ரூ.25.00 இலட்சமும்,

சில்லறை விற்பனை அங்காடி அமைக்க ரூ.5.25 இலட்சம் மானியத்தில் ஒரு எண்ணும், நிலையான, நகரும் விற்பனை வண்டி , மேடை அமைக்க ரூ. 15,000 மானியத்தில் 10 எண்களும் இலக்காக வரப்பெற்றுள்ளது.

பிரதம மந்திரியின் நீர்ப் பாசன இயக்கம் – நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் சிறு – குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 1,033 எக்டர் பொருள் இலக்கும் நிதி இலக்காக ரூ.787 இலட்சமும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மொத்த இலக்கீட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20 சதவீதமும், பெண் பயனாளிகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடும் உள்ளதால் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் இதத்திட்டங்களில் பங்கேற்று பயனடையலாம்.

இத்திட்டங்களில் பயன் அடைய தகுதியுடைய விவசாயிகள் தங்களது நிலம் தொடர்பான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி புத்தக நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன்; தங்களது பெயர்களை அந்தந்தப்பகுதி வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில் 20.07.2016 புதன்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் (விண்ணப்ப மேளா) காலை 10.00மணி முதல் மாலை 5.00 மணி வரை பதிவு செய்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Check the Latest News Headlines and Updates in Tamil Featuring Politics, business, - Kalaimalar.

error: Content is protected !!