Do not do crop insurance for farmers and paddy till Nov 30: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2018-19-ஆம் ஆண்டு நெல் II சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை பெய்யாததால், சாகுபடி பரப்பு மிகவும் குறைவாக உள்ளது.

மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் – வழிகாட்டு நெறிமுறையின்படி (PMFBY Operational Guidelines) இழப்பீடு வழங்குவதற்கு முதல் நிலையான, விதைப்பு (அ) நடவு பொய்த்தல் (Prevented / Failed Sowing) 15.11.2018 அன்று மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அறிக்கை வேளாண்மை இயக்குநர், வேளாண்மைத்துறை, சேப்பாக்கம், சென்னை – 05 மற்றும் வேளாண் காப்பீட்டு நிறுவனம் (AICL) சென்னை அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே 15.11.2018க்குப் பிறகு 30.11.2018 வரை விவசாயிகள் நெல் II சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டாம். மேலும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி விவரம் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!