Farmers protest in Perambalur demanding the setting up of a system for fixing prices for agricultural commodities.

பெரம்பலூரில் மத்திய அரசு வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய அதிகாரமுள்ள அமைப்பை ஏற்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கைதட்டி நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிநாயுடு வின் 98 வது பிறந்தநாளைமுன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செய்தனர். பின்னர், அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில், விவசாய விளைபொருட்களுக்கு உத்திரவாத விலை கிடைக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும், தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் தோட்டக்கலைபயிர்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி இடுபொருள் நிவாரணம் உதவி வழங்க வேண்டும், திருவாரூர் மாவட்டத்தில் நடந்தது போல், பெரம்பலூர் மாவட்டத்திலும், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம், போலீஸ் எஸ்.பி தலைமையிலும் நடத்த வேண்டும், பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் திருச்சி மண்டல மின்பொறியாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சேலத்தில் நடைமுறையில் இருப்பது போல் திருச்சியிலும் மத்திய கூட்டுறவு வங்கியில் அனைத்து வகையான பயிர்க்கடனை கட்டுவதற்கு கால அளவை ஓராண்டாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கைதட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முக்கிய பிரமுகர்கள் எஸ்.கே. செல்லக்கருப்பு, கே.துரைராஜ், கே.அன்பழகன், அழகமுத்து, எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Check the Latest News Headlines and Updates in Tamil Featuring Politics, business, - Kalaimalar.

error: Content is protected !!