Financial assistance to build houses for construction workers, housing allocation: Perambalur Collector information!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் 3 ஆண்டு காலத்திற்கு மேல் உறுப்பினராக பதிவு பெற்றிருக்கவேண்டும். தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்கவேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. அரசின் வேறு எந்த இணை வீட்டு வசதி திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 20 ச.மீ. வீட்டு மனை இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டு மனை பட்டா இருக்கவேண்டும். அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டு மனை கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் https://tnuwwb.tn.gov.in/ இணையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!