Gift and Appreciation Certificates for the students who have obtained primary marks at the state level || மாநில அளவில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள்

பெரம்பலூர் : கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.நந்தகுமார் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

அதனடிப்படையில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹேமலதா என்ற மாணவி நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும், புனித ஆண்டுருஸ் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த எழில்மதி என்ற மாணவி 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மற்றும் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சௌமியா என்ற மாணவி 500 மதிப்பெண்களுக்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.25,000 மதிப்பிலும், இரண்டாமிடம் பிடித்தவருக்கு 20,000 மதிப்பிலும், மூன்றாமிடம் பிடித்தவருக்கு ரூ.15,000 மதிப்பிலுமான காசோலைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் இருதயமேரி உடனிருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!