In Perambalur providing less money in the bank at the farmers blocked the road in protest
பெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் நபர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக குற்றம் சாட்டி விவாசயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர், சங்குப்பேட்டை பகுதியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பயிர் கடன்களுக்கான பணம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. போதியளவு பணம் வங்கியை வந்தடையாததால் வங்கி நிர்வாகம் தலா ரூ. ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. பின்னர் அதிக அளவு விவசாயிகள் திடீரென வங்கியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்ததால் வங்கி நிர்வகாம் திணறியது. உடனடியாக கையிருப்பு இருக்கும் பணத்தின் அளவிற்கு ஏற்ப ஆயிரம் வழங்குவதாகவும், பின்னர், வங்கிக்கு பணம் வந்தடைந்தவுடன் மீதம் பணம் வழங்குவதாக உறுதி அளித்தது. இதனை ஏற்காத விவசாயிகள் சங்குப்பேட்டை பகுதியில் நின்று அவ்வழியாக வந்த திருச்சி, அரியலூர், துறையூர், ஆத்தூர் மார்க்கமாக செல்லும் வாகனங்களை வழிமறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து உடனடியாக தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். பின்னர், வங்கி அதிகாரிகளிடம் பேசிய வருவாய் துறை வட்டாசியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பெரம்பலூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி டோக்கன் வழங்கி அனைவருக்கும் பணம் வழங்க ஏற்பாடுகள் செய்தனர்.