In Perambalur starts tomorrow at the Book Fair Tomorrow

பெரம்பலூர் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நகராட்சி மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க ஆதரவுடன், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் 6 ஆவது புத்தகத் திருவிழா நாளை ஜன. 27 ஆம் தேதி முதல் துவங்கிறது.

குழந்தைகள், இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், கலை, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், நாவல்கள், மதம், என பல்வேறு பிரிவுகளிலும் புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள் முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் சார்பில் 122 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 8 லட்சம் புத்தகங்கள் காண்காட்சிக்கு வைக்கப்பட்டு விரும்புவோருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

நாளை தொடங்கி தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற உள்ளதாகவும், இதில் குறும்படங்கள், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பேச்சாளர்கள் உரை, சிறுதானிய உணவுகள், வாசகர்கள் புத்தகங்களை வாங்க வசதியாக முன்னனி 15 வங்கி நிறுவனங்களின் ஸ்வைப் மிசின்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும், நுழைவு கட்டணமாக ரூ.1- மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், நேசனல் புத்தக ட்ரஸ்ட் மதன்ராஜ் தெரிவித்தார். மேலும், நாளை மாலை மணிக்கு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர் என்றும் தெரிவித்தார். பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத் தலைவர் விஷால் சரவணன், செயலாளர் ஜெ.அரவிந்தன், மற்றும் புத்தக்திருவிழா ஒருங்கிணைப்பாளர் மேத் ஐடி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!