In Perambalur, veppantattai Union district administration consulting with the younger generation of farmers
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள இளந்தலைமுறை விவசாயிகளுக்கு தற்போதைய விவசாயம் குறித்த சந்தேகங்களை போக்கும் வகையிலும், விவசாயத்திற்கென்று வேளாண்மை சார்ந்த துறைகளில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் வகையிலான ஆலோசனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட இளந்தலைமுறை விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இளந்தலைமுறையினர் விவாயத்தில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக்கூட்டம் நடத்தப்படுகின்றது. இளந் தலைமுறையினர் விவசாயத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.
விவசாயம் லாபகரமான தொழில் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், அனைவரின் கவனமும் விவசாயத்தின் பக்கம் திரும்பும் வகையிலும் இளந்தலைமுறையினரின் பங்களிப்பு இருக்கவேண்டும்.
இன்றைய நவீன விவசாயம் சார்ந்த முறைகள் குறித்தும், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்தும், நவீன இயந்திரங்கள் குறித்தும் எப்போது வேண்டுமானாலும், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது உங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை அலுவலர; அலுவலகத்திலோ தொடர;புகொண்டு கேட்டறியலாம்.
மாதத்திற்கு ஒருமுறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தமிழகஅரசு சொட்டு நீர்ப்பாசனத்திற்கு 1500 ஹெக்டேர் இலக்கீடு நிர்ணயித்துள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளிடமிருந்து சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று மனுக்கள் பெறப்படுகின்றது. அங்கேயே சிறு,குறு விவசாயிகளுக்கான சான்றும் வழங்கப்படுகின்றது. எனவே, சொட்டு நீர;ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள வேளாண் வயல்களில் மண் பரிசோதனை செய்து முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உங்கள் வயல்களின் மண்ணை பரிசோதனை செய்ய விரும்பினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது உங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை அலுவலர; அலுவலகத்திலோ உங்கள் வயல் மண்ணின் மாதிரியை அளித்தால் பரிசோதனை செய்து தரப்படும்.
எனவே, இளந் தலைமுறையினர் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து வேளாண்மை தழைத்தோங்க முன்வரவேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசினார்.
முன்னதாக தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வெற்றிகண்டுள்ள இளந்தலைமுறையினர் தங்கள் அனுபவங்களை அனைவரோடும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.