In private schools, reservation in the Right to Compulsory Education Act; Perambalur Collector Information!

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் – 2009 பிரிவு 12(1)(C) ன்படி பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (எஸ்.சி, எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., மற்றும் டி.என்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்), வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் ( ஆதரவற்றோர், எச்.ஐ.வி–யால் பாதிக்கப்பட்ட குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை மற்றும் மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தை) நலிவடைந்த பிரிவினரின் (பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டு இலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள்) குழந்தைகளுக்கு ஆரம்பநிலை வகுப்பில் (எல்.கே.ஜி.அல்லது 1-ஆம் வகுப்பு ) 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு சேர்க்கை செய்யப்படுகிறது.

பெரம்பலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 63 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 609 இடங்கள் ஆர்.டி.இ. 25 % இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை விதிகள் – 2011 விதி எண்.4(1)இன்படி பள்ளியிலிருந்து 1 கி.மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 20.04.2022 முதல் 18.05.2022 வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

இம்மாணவர் சேர்க்கைக்கு குழந்தையின் புகைப்படம், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார்அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சார்ந்த தனியார் சுயநிதிப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பெற்றோர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!