Intense Polio Drip Camp 2020; The Collector started at Perambalur.

பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை துறைமங்கலத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் இன்று காலை பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்ச்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர்மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தொடங்கி வைத்தார்

போலியோ முகாமை துவக்கி வைத்த கலெக்டர் தெரிவித்ததாவது:

இளம்பிள்ளை வாத நோயை, இந்தியாவில் ஒழிக்க 5 வயதிற்குள் உள்ள (பிறந்த குழந்தை முதல்) அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆக மொத்தம் 387 மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப் பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆக மொத்தம் 1548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 45.758 குழந்தைகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முகாமில் கலந்துகொண்ட தாய்மார்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் சுப்பையா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, வட்டாட்சியர் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!