Interviewing camp for self employment opportunities for unemployed youth

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான விளக்க கூட்டம் மற்றும் நேர்காணல் முகாம்.

பெரம்பலூர் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று சுயமாக தொழில் தொடங்க, வியாபாரம் செய்வதற்கு ரூபாய் ஒரு லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3.00 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.5.00 லட்சமும் பரிந்துரைக்கப்படுகிறது.
இத்திட்டத்தினை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அளவிலான விழிப்புணர்வு மற்றும் நேரடி நேர்காணல் முகாம் 19.05.2015 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வேப்பந்தட்டையிலும், 20.05.2015 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வேப்பூரிலும், 21.05.2015 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆலத்தூரிலும் நடைபெறவுள்ளது. விழிப்புணர்வு முகாமில் காலை 10.00 மணிக்கு திட்ட விளக்கமும் அதன்பின் தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, மதியம் 2.00 மணிக்கு நேரடி நேர்காணலும் நடைபெறும்.
இத்திட்டத்திற்கான தகுதிகள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் பொது பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 18க்கு மேல் – 35க்குள்ளும் சிறப்பு பிரிவினருக்கு 18க்கு மேல் – 45 க்கு இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இம்மாவட்டத்தில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதிகள் உடையவர்கள் தங்களின் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம். தகுதி உள்ளவகளுக்கு உடனே விண்ணப்பம் வழங்கப்பட்டு அன்றைய தினமே நேர்காணல் நடைபெறும். நேர்காணலில் தேர்ந்தெடுகப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட சேவைப் பகுதி வங்கிக்கு கடனுதவி பெறுவதற்கு பரிந்துரைக்கப்டும். ஏற்கனவே ஏதாவது ஒரு திட்டத்தில் மானியத்துடன் கடன் பெற்றிருந்தால் அவர்கள் தகுதியற்றவர்கள். மேற்காணு தகுதி உள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும் பொழுது மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, டின் நம்பர் உள்ள விலைப்பட்டியல், ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
மேலும் தாங்கள் துவங்க உள்ள தொழிலை www.msmeonline.tn.gov.in என்னும் இணையதள முகவரியில் EM பகுதி-1 என்னும் பதிவறிக்கையில் பதிந்து இரண்டு நகல்கள் கொண்டுவர வேண்டும்.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04328 291595 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!